உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்ட இளைஞர்கள் மீது சிலர் தீயை பற்ற வைத்ததால் பரபரப்பு
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் கடந்த 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற விஷவாயு தாக்குதலில் 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த ஆலையில் இருந்த சுமார் 377 டன் கழிவுகள் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்டு போபாலில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீத்தாம்பூர் பகுதியில் உள்ள மறுசுழற்சி ஆலையில் அழிப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த கழிவுகளை பீத்தாம்பூர் பகுதியில் அகற்றுவதால் சுற்றுச்சூழல் மற்றும் நீர் மாசு ஏற்படும் என குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது இரண்டு இளைஞர்கள் தங்களின் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டனர்.
பெட்ரோலை ஊற்றிக்கொண்ட இளைஞர்கள் தங்களின் மீது தீ வைத்துக் கொள்ளாத நிலையில் அருகே இருந்த சிலர் தீயை கொளுத்தி போட்டனர்.
இதனால் அந்த இளைஞர்களின் உடலில் தீ மளமள பரவியது.
இதனால் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.