சபரிமலையின் எதிரொலி.. திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் | Thiruchendur Murugan Temple
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூர் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். திருச்செந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர். இதனால் கோயிலில் அதிகால் 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை நடைபெற்றது. அதிகாலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாரதனை நடந்தது. அதிகாலையிலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்தனர்.