பவன் கல்யாண் பங்கேற்ற நிகழ்ச்சியில் போலி ஐபிஎஸ் அதிகாரி! - அதிர்ந்து போன ஆந்திரா | Pawan Kalyan

Update: 2024-12-30 10:29 GMT

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பி டெக் மட்டுமே படித்திருக்கும் சூரிய பிரகாஷ் என்பவர் ஐபிஎஸ் அதிகாரி போல் சீருடை அணிந்து அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை உளவுத்துறை அதிகாரிகள் யாரும் கவனிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூரிய பிரகாஷ் தான் கலந்து கொண்ட புகைப்படங்களை வாட்ஸப்பில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார்... இது போலீஸ் காதுகளுக்குச் செல்லவே, போலீசார் சூரிய பிரகாஷைப் பிடித்து விசாரணை நடத்தினர்... அப்போது தன்னுடைய தந்தை 9 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும் ஆனால் அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ய இயலவில்லை என்றும் கூறிய அவர், ஐபிஎஸ் அதிகாரி என்று கூறினால் பயந்து கொண்டு பத்திரப்பதிவு செய்து விடுவார்கள் என்று கருதி இவ்வாறு செய்வதாக தெரிவித்துள்ளார்... சூரிய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் பவன் கல்யாண், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது போலீசாரின் பொறுப்பு என்றும், தனது சுற்று பயண நிகழ்ச்சிகளில் ஊடுருவல் ஏதாவது நடைபெறுகிறதா என்று கண்காணிக்க வேண்டியது உளவுத்துறையின் பணி எனவும் தெரிவித்ததுடன், போலீஸ் அதிகாரிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்