அந்த மாதிரி ஆசையில் மகளை கட்டிலுக்கு அழைத்த தந்தை... -கண்டம் துண்டமாக வெட்டி வீசிய ரோசக்கார மனைவி

Update: 2025-01-02 11:38 GMT

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் சிக்கோடி கிராமத்தில் உள்ள உம்ராணி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீமந்த். இவருக்கு சாவித்திரி என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் வேலைக்கு சென்று வந்த சாவித்திரியை கணவர் ஸ்ரீமந்த் பாலியல் உறவுக்கு அழைத்தாகவும், அதற்கு சாவித்திரி மறுத்தாகவும் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ஸ்ரீமந்த் மகளிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அதனை சாவித்திரி தடுத்துள்ளார். வேதனையடைந்த சாவித்திரி, மது போதையில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவனை 'அம்மிக் கல்லை' கொண்டு கொலை செய்துள்ளார். பின்னர் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி, வயல் வெளியில் தூக்கி எறிந்துள்ளார். கொலை செய்ய பயன்படுத்திய அம்மிக் கல் மற்றும் கத்தியை அங்கிருக்கும் கிணற்றில் போட்டுள்ளார். காலையில் வயல்வெளியில் கிடந்த சடலத்தை பற்றி காவல்நிலையத்திற்க தகவல் தரப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் சாவித்திரி தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்