நடுரோட்டில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொல்ல முயன்ற கும்பல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

x

கர்நாடகாவில் நடுரோட்டில் இளைஞரை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டிக் கொல்ல முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. முன்விரோதம் காரணமாக மாருதி என்பவரை சூழ்ந்து கொண்ட கும்பல் அவரைக் கடுமையாக கத்தியால் தாக்கியுள்ளனர்... ஹூப்ளி நகரின் வாட்டர் டேங்க் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மாருதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்த மக்கள் எச்சரித்த நிலையில் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது... காயமடைந்த மாருதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்