யாரும் எதிர்பாரா நேரம்... மின்கம்பி அறுந்து விழுந்து... பற்றியெரிந்த பஸ் - அதிர வைக்கும் வீடியோ

Update: 2025-01-02 11:45 GMT

பேருந்தின் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததால், பேருந்து தீ பிடித்து எறிந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுற்றுலா பேருந்து ஒன்று அலுவலகம் அருகே நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நடு இரவில் மின்கம்பி ஒன்று அறுந்து பேருந்தின் மீது விழுந்ததில், பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எறிந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தின் தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்