பைக்கோடு குதித்தவரை காப்பாற்ற சென்ற யாரென்றே தெரியாத 4 இளைஞர்களும் பரிதாப மரணம்
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள சார்ஹி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் கர்மாலி. இவருக்கும், இவரது மனைவி ரூபா தேவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டநிலையில், சுந்தர் கர்மாலி அருகில் உள்ள ஒரு கிணற்றில் தனது இரு சக்கர வாகனத்துடன் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த நான்கு இளைஞர்கள், சுந்தர் கர்மாலியை காப்பற்ற வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து கிணற்றில் குதித்தனர். இருப்பினும் கிணற்றில் குதித்த சுந்தர் கர்மாலி உட்பட அவரை காப்பாற்ற சென்ற நான்கு பேரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், கிணற்றில் சடலமாக கிடந்த சுந்தர் கர்மாலி, ராகுல் கர்மாலி, வினை கர்மாலி, பங்ஜ் கர்மாலி மற்றும் சூரஜ் ஆகிய 5 பேரின் உடலையும் மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், அந்த கிணற்றை பொது மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் முழுவதுமாக மூடியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது