களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டம் - புதுச்சேரியில் தலைகீழாய் மாறிய நிலை

Update: 2024-12-25 06:28 GMT

புதுச்சேரியில் கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, புதுச்சேரி வருவதற்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் தயங்குவதாக கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர் விடுமுறை உள்ள நிலையிலும், தங்கும் நட்சத்திர விடுதிகளில் புக்கிங் குறைந்துள்ளது. வருடம்தோறும் 50க்கும் மேற்பட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறுவதால் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்துள்ளது. புதுச்சேரியில் வரி உயர்வால் நிகழ்ச்சிகள் நடத்த யாரும் ஆர்வம் காட்டவில்லை என, கேளிக்கை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை சாலையில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக, மதுபானக் கடை மற்றும் வர்த்தக நிறுவன நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்