வயிற்றில் ஒரு உயிரை வளர்த்து ஈவு இரக்கமின்றி 6 வயது மகள் உயிரை எடுத்த கொடூர பேய்

Update: 2024-12-21 07:22 GMT

6 வயதே ஆன சிறுமியை, சித்தியே தலையணையால் அமுக்கி கொலை செய்திருக்கும் சம்பவம் மனதை ரணமாக்கி உள்ளது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே உள்ள கோதமங்கலம் பகுதியில் தான், இப்படி கொடூரம் அரங்கேறி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான அஜாஸ் கான் என்பவரின் 6 வயதான மகள் முஸ்கானா தான், கொலை செய்யப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே, திருமணமான அஜாஸ் கான், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட நிலையில். முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை முஸ்கானாவுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், 26 வயதே ஆன அனீஷா என்ற என்ற பெண்ணை அஜாஸ் கான் 2 ஆவதாக திருமணம் செய்த நிலையில், இருவருக்கும், 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இதனிடையே, அனீஷா மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இப்படியாக இருந்த இவர்களது வாழ்க்கையில், அஜாஸ் கான் வழக்கம் போல, பணிக்கு சென்றார், சிறிது நேரத்தில் அனீஷா, வீட்டில் முஸ்கானா மயங்கிய நிலையில் விழுந்து கிடப்பதாக போனில் தகவல் கூறவே, தந்தை அஜாஸ் கான் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிறகு என்ன ஆனதோ, ஏது ஆனதோ எனப் பதறிப்போய் வீட்டிற்கு வந்த அஜாஸ் கான், மகள் முஸ்கானாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு போயுள்ளனர். ஆனால், அங்கு குழந்தையை சோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுமி உயிரிழந்து விட்டதாக கூறியது, தந்தை அஜாஸ் கான் தலையில் பேரிடியாய் விழுந்துள்ளது.

பிறகு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், சிறுமி மூச்சுத் திணறி இறந்திருப்பது அம்பலமானது.

இதையடுத்து போலீசார், தந்தை அஜாஸ் கானிடமும், சித்தியான அனீஷாவிடமும் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

ஓடி ஆடி விளையாடிய சிறுமி முஸ்கானா, களைப்பில் நன்கு அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தலையணையால் அமுக்கி மூச்சுத் திணற வைத்து கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொலை செய்ததை கர்ப்பிணியான அனீஷா போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

மேலும், சிறுமி முஸ்கானா மரணத்திற்கு, அவரது தந்தை அஜாஸ் கான் உடந்தையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

கணவனின் மூத்த தாரத்தின் மகளை, தனது பிள்ளையாகப் பார்த்து வளர்க்க வேண்டிய சித்தியே, திட்டமிட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்