GST வரியில் வர போகும் சர்ப்ரைஸ் மாற்றங்கள் - எது குறைப்பு? எது உயர்வு?

Update: 2024-12-21 08:15 GMT

ராஜஸ்தான் மாநிலம் ஜெய் சால்மரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்று வருகிறது... சுகாதார மற்றும் ஆயுள் காப்பீடு பிரிமியத்தின் மீது 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் நிலையில் அவற்றை குறைப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 150க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான வரியை மாற்றி அமைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சிறிய வகை பெட்ரோல் டீசல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிப்பது குறித்தும் விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்