பக்தர்கள் கவனத்திற்கு... திருப்பதியில் திடீர் மாற்றம்... வெளியான அறிவிப்பு
அதன்படி 300 ரூபாய் சிறப்பு ஆன்லைன் தரிசனத்திற்கான முன்பதிவு 25ம் தேதி காலை 10 மணிக்கு பதிலாக 26ம் தேதி காலை 11 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது... மார்ச் மாதத்திற்கான 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் டிசம்பர் 25ம் தேதி காலை 11மணிக்கும், மார்ச் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 26ம் தேதி காலை 11 மணிக்கும் வெளியிடப்படும். திருமலையில் உள்ள தங்கும் அறைகள் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்யும் விதமாக வெளியிடப்படும். எனவே பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தேவஸ்தானத்தின் இணையதளத்தில் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... அடுத்த மாதம் நடைபெறும் 10 நாள்களுக்கான வைகுண்ட துவார தரிசனங்களுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் டிசம்பர் 24ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.