பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியில் சபரிமலை - தேவஸ்தானம் எடுத்த ஷாக் முடிவு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டதுடன், ஆன்லைன் முன்பதிவும் குறைக்கப்பட்டுள்ளது... கடந்த மாதம் 15ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 30 லட்சத்து 82 ஆயிரத்து 107 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த 3 நாள்களாக நாள் ஒன்றுக்கு 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். 26ம் தேதி மண்டல பூஜை நடைபெற இருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக 25 மற்றும் 26ம் தேதிகளில் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடி முன் பதிவு இருதினங்களிலும் நிறுத்தப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளது. 2 நாள்களிலும் 60 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 26ம் தேதி மண்டல பூஜை முடிந்தவுடன் நடை அடைக்கப்பட்டு மீண்டும் 30ம் தேதி நடை திறக்கப்படும். ஐயப்பன் கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.