கேரள மாநிலம் காசர்கோடு நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் வீரராகவர் கோயிலில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிககை 5-ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்ற கோயில் திருவிழாவில், வாணவேடிக்கைகளின்போது கொளுத்தப்பட்ட பட்டாசுகளின் தீப்பொறி, குடோன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டைகளின் மீது விழுந்து எரிந்தது. இந்த விபத்தில் 154 பேர் காயமடைந்ததாக காசர்கோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிணவூரைச் சேர்ந்த ரஜித் என்பவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது.