"AICTE அனுமதிக்கு பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்" - தேதி குறித்த ஏஐசிடிஇ | AICTE | Thanthi TV
ஏஐசிடிஇ AICTE அனுமதியை பெறுவதற்கு, ஜனவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை, பொறியியல் கல்லூரிகள் அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2025-26 ம் கல்வியாண்டில், பாடப்பிரிவு மற்றும் கல்லூரி இடங்களுக்கான ஏஐசிடிஇ அனுமதியை பெறுவதற்கு, பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 9-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், பொறியியல் கல்லூரிகள் மீண்டும் ஏஐசிடிஇ அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2 வரை, அபராதத்துடன் பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்த பின்னர் பொறியியல் கல்லூரிகளில் பல்கலைக்கழக உயர்மட்டக்குழு ஆய்வு செய்யும் என ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
மேலும், உரிய கலவித் தகுதியின் அடிப்படையிலேயே ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமெனவும் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.