சூரல் மலையை விட்டு வெளியேறிய மக்கள் - உள்ளே புகுந்த யானை கூட்டம்

Update: 2025-03-21 08:40 GMT

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் சேதமான சூரல் மலையில் மக்களின் எண்ணிக்கை குறைந்து சாலைகள் வெறிச்சோடி உள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் தற்போது அங்கு காட்டு யானைகள் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன. பகல் நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் யானைகள் அதிகளவில் உலா வருகின்றன. குட்டிகளுடன் கூட்டமாக சாலையை கடந்து, அங்குள்ள காப்பி தோட்டம் வழியாக குடியிருப்புக்குள் நடமாடியது. இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்