எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு நாய் - கல் மனதையும் கரைய வைக்கும் காட்சி
கர்நாடகா மாநிலம் கெப்பல் அருகே தீப்பற்றி எரிந்த வீட்டுக்குள், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினரை, வளர்ப்பு நாய் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடு தீப்பிடித்ததை பார்த்த வளர்ப்பு நாய், ஆபத்தை உணர்த்தும் வகையில் குரைத்து வீட்டின் உரிமையாளரை எழுப்பியுள்ளது. கண் விழித்து பார்த்த தம்பதி, வீடு எரிவதைக் கண்டு, குழந்தைகளையும் காப்பாற்றி வெளியேறினர். விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீக்காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.