BREAKING || திருப்பதியை உலுக்கிய கூட்ட நெரிசல் பலி -ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எடுத்த முடிவு

Update: 2025-01-09 15:14 GMT

உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தல 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் தேவஸ்தான வேலை, படுகாயம் அடைந்த இரண்டு பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி, சாதாரண காயம் அடைந்த 34 பேருக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி, அசம்பாவித சம்பவத்திற்கு காரணமான டிஎஸ்பி ரமண குமார், ஒரு தேவஸ்தான அதிகாரி ஆகியோர் சஸ்பெண்ட்.

தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி கௌதமி, தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரி ஸ்ரீதர் திருப்பதி எஸ் பி சுப்பராய்டு ஆகியோர் ட்ரான்ஸ்பர் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேட்டி.

நேற்று திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியானது தொடர்பாக திருப்பதிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, நடைபெற்ற சம்பவம் மிகவும் துரதிஷ்டமானது என்று குறிப்பிட்ட அவர் இந்த சம்பவத்திற்காக நான் மன வேதனை அடைந்துள்ளேன் என்றும் குறிப்பிட்டார்.

கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பணியில் இருந்த டிஎஸ்பி ரமண குமார் மற்றும் அந்த பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த தேவஸ்தான அதிகாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி கௌதமி, தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரி ஸ்ரீதர், திருப்பதி எஸ் பி சுப்பராய்டு ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடுடன் குடும்பத்தில் ஒருவருக்கு தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருக்கும் இரண்டு பேருக்கு தலை ஐந்து லட்ச ரூபாயும், சாதாரண காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களுக்கு தலா இரண்டு லட்ச ரூபாயும் இழப்பீடும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் திருப்பதி மலையில் வழங்கப்படும் தரிசன டோக்கன்களை திருப்பதியில் வழங்கியது தவறு என்ற கருத்து தெரிவித்த அவர் இது தொடர்பாக அனைத்து தரப்பினரிடம் கருத்து கேட்டு உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி நாள் அன்று மட்டுமே ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய ஆர்வம் செலுத்துவார்கள்.

ஆனால் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான முடிவு காரணமாக 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இது பற்றி ஆகம சாஸ்திர நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய மாற்றம் செய்யப்படும் என்றும் அப்போது கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்