ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் 18ஆவது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். தான் எப்போதும் இந்திய புலம் பெயர்ந்தோரை இந்தியாவின் தூதர்களாகவே கருதி வருவதாக தெரிவித்தார். இந்தியர்கள் எங்கு சென்றாலும், அங்குள்ள சமூகத்துடன் இணைந்து, அங்குள்ள விதிகள் மற்றும் மரபுகளை மதிக்கிறார்கள் என்றார். புலம்பயர்ந்த இந்தியர்கள் உலகில் எங்கிருந்தாலும், நெருக்கடி காலங்களில் அவர்களுக்கு உதவுவதை இந்தியா தனது கடமையாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்தியா ஜனநாயகத்தின் தாயாக மட்டுமல்லாமல் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் ஜனநாயகம் திகழ்வதாக கூறினார்.