இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டுமானது என்றால் அதனை கலைத்து விடலாம் என தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணிக்கு எந்த விதமான கால வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்றார், ஆனால் மக்களவைத் தேர்தலுக்குப் பின் இந்தியா கூட்டணி சார்பில் எந்த ஒரு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் எனவே இந்தியா கூட்டணியின் தற்போதைய நிலை, அதன் தலைமை குறித்து தெளிவு இல்லை என குறிப்பிட்டார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் இந்தியா கூட்டணி கட்சிகளை அழைத்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.