இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை அடித்தே கொலை - கொடூர மகன் கட்டிய கட்டுக்கதை | Karnataka
மைசூரு மாவட்டத்தின் பிரியாபட்டின தாலுகாவில் உள்ள கொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டு... இவர், தனது தந்தை அண்ணப்பா மீது 1 கோடி ரூபாய் வரை காப்பீடு எடுத்துள்ளார். இன்சூரன்ஸ் பணத்தைப் பெற தந்தையை கொலை செய்ய பாண்டு திட்டமிட்டுள்ளார். இதன்படி தந்தையை பைக்கில் அழைத்துச் சென்ற பாண்டு, யாரும் இல்லாத இடத்தில் உருட்டுக் கட்டையால் தாக்கி தந்தையைக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து உடலை சாலையில் வீசிவிட்டு விபத்தில் தனது தந்தை இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். பிரேத பரிசோதனையில் உடலில் காயங்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்த நிலையில், விரைவில் இறப்புச் சான்றிதழ் வழங்குமாறு பாண்டு வலியுறுத்தியதால் சந்தேகமடைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் தந்தையை இன்சூரன்ஸ் பணத்திற்காக அடித்துக்கொலை செய்ததை பாண்டு ஒப்புக்கொண்ட நிலையில், அவரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.