பாஜகவுக்கு நேற்று ஷாக் கொடுத்த ஹேமந்த் சோரன் - இன்று இந்தியா கூட்டணி எடுக்கும் முடிவு
ஜார்க்கண்ட் சட்டமன்ற குழு தலைவராக ஹேமந்த் சோரன் இன்று தேர்வு செய்யப்படுகிறார். நடந்து முடிந்த ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜேஎம்எம் தலைமையிலான இந்தியா கூட்டணி 56 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஹேமந்த் சோரனுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் சட்டமன்ற குழு தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட உள்ளார். அதன் பிறகு அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அவர் உரிமை கோரவுள்ளார்.