கிழக்கிலும், மேற்கிலும் குலுங்கிய இந்தியா... பதற வைத்த நிலநடுக்கம்... பீதியில் மக்கள்
அசாம் மாநிலத்தில் இன்று பிற்பகல் 12.28 மணி அளவில், ரிக்டர் அளவில் 3.6 புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கர்பி ஆங்லாங் என்ற இடத்தில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. அதேபோல் அரியானா மாநிலம், ரோஹ்தக்கில் இன்று காலை 7.50 மணி அளவில் ஏழு கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதன் தாக்கம் மூன்று 3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. 2 மாநிலங்களில் ஏற்பட்ட இந்த லேசான நிலநடுக்கம் காரணமாக உயிர் இழப்புகளோ, காயங்களோ
ஏதும் பதிவாகவில்லை என்றும் உடைமைகளும் சேதம்
ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.