உடல் கொட்டாரம் சாலையில் உள்ள அவரது இல்லமான சித்தாராவுக்கு கொண்டு வரப்பட்டு மாலை 4 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் மோகன்லால், கேரள அமைச்சர் ஏ கே சுசீந்திரன், எம்பி ஷாஜி பரம்பில் சுவராஜ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தான் நடித்த மிகச்சிறந்த கதாபாத்திரங்களை எம் டி வாசுதேவன்நாயர் உருவாக்கினார் என்றும், அவரது பேனாவால் மறக்க முடியாத பல கதாபாத்திரங்களை சித்தரிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாகவும் மோகன்லால் சிலாகித்தார். அதேபோல் தங்கள் உறவு ஒரு நண்பனை போல ஒரு சகோதரரை போல பெருகியது என்று மம்முட்டி நெகிழ்ச்சி தெரிவித்தார்.