சென்னை, சேலம், பெங்களூரு வரை வந்த HMPV வைரஸ் - கலக்கத்தில் இந்தியா.. பயப்பட வேண்டுமா?
மகாராஷ்டிராவில் HMPV வைரஸ் தொற்று குறித்து பதற்றம் அடைய தேவையில்லை என அம்மாநில மக்களுக்கு மாநில சுகாதார அமைச்சர் பிரகாஷ் அபித்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெங்களூருவில் தொற்று ஏற்பட்டதை தொடர்பு படுத்தி பீதியடைய வேண்டாம் எனவும் மகாராஷ்டிரா அரசு மற்றும் மத்திய அரசுகளின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே, மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், குளிர்காலம் மற்றும் கோடை காலத்துக்கு முந்தைய சமயத்தில் உருவாகும் வழக்கமான ஃப்ளு காய்ச்சல் போன்றதுதான் இது எனவும் பதற்றம் அடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
Next Story