புதுச்சேரியில் மின்சாரத்துக்கான ஸ்மார்ட் மீட்டரை போஸ்ட் பெய்டு முறையில் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில் ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அரசு திட்டமிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், புதுச்சேரி மின்துறை சார்பு செயலர் வெளியிட்டுள்ள உத்தரவில், ஸ்மார்ட் மீட்டரை ப்ரீ பெய்டு முறையில் இல்லாமல், போஸ்ட் பெய்டு முறையில் செயல்படுத்த அரசு ஒப்புதல் தந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் விருப்ப அடிப்படையில் ப்ரீபெய்டு முறைக்கு மாற்றுவதை ஊக்குவிக்க அரசு முடிவு எடுத்து, அரசாணையில் திருத்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.