மாலை,மரியாதை செய்து வீட்டுக்குள் வைத்து கொடூர தாக்குதல்.. குழந்தை முன்பே சித்திரவதை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹொசகோட்டை நகரில் ராமண்ணா என்பவரை லதா என்பவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று, தலைப்பாகை, மாலை மற்றும் சால்வை அணிவித்து, குழந்தை முன்னிலையிலேயே ராமண்ணாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.