RRB Exam |தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் -விளக்கம் கொடுத்த தேர்வு வாரியம்
1,315 தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது குறித்து ரயில்வே தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது. அதில், உதவி லோகோ பைலட் பணிக்கான 2-ம் கட்ட தேர்வு அனைவருக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால், விண்ணப்பதாரர்களுக்கு இயன்றவரை அவர்களின் சொந்த மாநிலத்திலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சொந்த மாநிலத்தில் இடமில்லாத சூழலில், தேர்வர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.