இந்தியா தேடிய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

Update: 2025-03-17 00:00 GMT
இந்தியா தேடிய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

164 பேர் கொல்லப்பட்ட 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு சூத்திரதாரியாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்திற்கு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வருகிறது. ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளியான பயங்கரவாதி அபு கத்தால், ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட பல பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் போட்டவன் என்பது தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையில் தெரியவந்தது. இருவரும் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளனர். இந்த சூழலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஜீலம் பகுதியில் அபு கத்தால் பாதுகாப்பு வாகனங்களோடு சென்ற போது, வாகனங்களை குறிவைத்து ஆயுதம் ஏந்தியவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூட்டில் அபு கத்தால் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்