
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், சரியாக படிக்காத மகன்களின் எதிர்காலம் குறித்த கவலையில், தந்தையே இரு மகன்களை கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த சந்திர கிஷோருக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் ஒன்றாம் வகுப்பும், இரண்டாவது மகன் யுகேஜியும் படித்து வந்துள்ளனர். மகன்கள் சரியாக படிக்காததால் சந்திர கிஷோர் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் சந்திரபோஸ் தூக்கிட்ட நிலையில் சடலமாகவும், அவரது மகன்கள் இருவரும் தண்ணீரில் தலை மூழ்கடிக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும் கிடந்துள்ளனர். தொடர்ந்து உடல்களை கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.