போதை ஆசாமியின் வினோத ஆசை - ஆடிப்போன வாகன ஓட்டிகள்

Update: 2025-03-17 03:38 GMT

ஆந்திர மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் மது போதையில் ஒருவர் பேருந்துக்கு அடியில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மது பிரியர் பேருந்தின் பின்பக்க டயருக்கு அருகில் உள்ள ஸ்பேர் டயரில் ஏறி படுத்துக் கொண்டார். அவர் 15 கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு பின்னால் வந்த வாகன ஓட்டிகள் எச்சரித்ததை அடுத்து, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி விட்டு பார்த்தபோது, அந்த மது பிரியர் படுத்திருப்பது தெரிய வந்தது. அவரை பத்திரமாக வெளியே வரவழைத்த பின் அந்தப் பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்