முகலாய மன்னர் ஒளரங்கசீப் தனது தந்தையை சிறையில் அடைத்து உணவு, குடிநீரின்றி பட்டினி போட்டதாகவும், சகோதரனை கொன்றதாகவும் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். இத்தகைய கொடூரமான முகலாய மன்னர், இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருக்க முடியாது என்றும், அடிமைத்தனத்தின் சின்னங்கள் அமைதியான முறையில் அகற்றப்பட வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் குறிப்பிட்டார்.