எஸ்.வி. சேகர் சரணடைவதில் இருந்து விலக்கு - உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2025-03-22 02:40 GMT

சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த எஸ்.வி. சேகரின் மேல்முறையீடு மனுவுக்குப் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மேலும், சரணடைவதிலிருந்து எஸ்.வி. சேகருக்கு அளிக்கப்பட்ட விலக்கை உச்சநீதிமன்றம் மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்தது. அதோடு, பொது வாழ்க்கையில் இருக்கும் நபர்கள் பொறுப்புடன் நடத்திருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்