சினிமாவில் நம்பர் 1 யார்?" - குமுறிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்
தமிழ் சினிமாவின் தரம் தற்போது 6-வது இடத்திற்கு சென்றுள்ளதற்கு தயாரிப்பாளர்களே காரணம் என இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இஎம்ஐ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், தற்போதைய காலத்தில் தெலுங்கு சினிமா நம்பர் 1 இடத்திலும், மலையாள சினிமா 2-ம் இடத்திலும் உள்ள நிலையில், தமிழ் சினிமா 6-வது சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், சரியான தயாரிப்பாளர்கள் இல்லாததே தமிழ் சினிமாவின் பின்னடைவிற்கு காரணம் எனவும் அவர் கூறினார்.