ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் மத்தியில் தனது ஆசையை சொன்ன கயாடு லோகர்

Update: 2025-03-22 14:41 GMT

நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்க ஆசை என்று டிராகன் பட நாயகி கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற 25வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவர், கூடி இருந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் மத்தியில் நடந்து சென்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் மாணவ மாணவியர்கள் உற்சாகமாக பாடலுக்கு ஏற்ப நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்