குலைநடுங்க விட்ட கார் விபத்து - தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கஅஜித் தரப்பு சொன்ன `வார்த்தை’

Update: 2025-01-08 06:14 GMT

துபாயில் நடிகர் அஜித்குமாரின் ரேஸ் கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பயிற்சியின் போது நிகழ்ந்த விபத்தில் அஜித்குமார் காயமின்றி உயிர் தப்பியுள்ளார்....

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களின் படப்பிடிப்பு, டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், துபாயில் நடைபெற உள்ள ஜி.டி.3 கார் பந்தய போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்.

சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார் ரேசிங்கில் பங்கேற்பதால், தீவிர பயிற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.

'அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கிய அவர், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கார் பந்தய வீர‌ர் ஃபேபியனுடன்(Fabian) இணைந்து ஐரோப்பிய சீரீஸ் ஜிடி-3 பிரிவில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, துபாயில் வரும் 10ஆம் தேதி தொடங்கும் 24H Series பந்தயத்தில் பங்கேற்பதற்காக அஜித்குமார், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், பயிற்சியின் போது அஜித் ஓட்டிய கார், சாலையின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தடுப்பில் பயங்கரமாக மோதி, சில முறை சுழன்றபடி நின்ற‌து. இதனால் மைதானத்தில் பெரும் விபத்து ஏற்பட்ட‌து.

விபத்தில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தும், நடிகர் அஜித் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். அவரை ஊழியர் ஒருவர் பத்திரமாக அழைத்துச்சென்றார்.

விபத்தால் நடிகர் அஜித்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், பந்தயத்தில் இதுபோன்ற விபத்துகள் சாதாரணம் தான் என்றும் 'அஜித்குமார் ரேசிங்' நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

விபத்துக்குப்பின் அஜித்தின் புகைப்படத்தை சக ரேஸர் ஃபேபியன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருப்பது, ரசிகர்களை நிம்மதி அடைய செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்