கார் பந்தய பயிற்சி விபத்தில் சிக்கிய அஜித் - ரேசிங் குழு முக்கிய தகவல் | AjithKumar Racing
துபாயில் கார் பந்தய பயிற்சியின்போது அஜித்குமார் சென்ற கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் பணிகளை முடித்துள்ள அஜித்குமார், தற்போது முழுநேரமாக கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் தொடங்கும் 24H DUBAI கார் பந்தயத்தில் அவரது அணி களமிறங்கும் நிலையில், இதற்காக அஜித்குமார் தீவிர பயிற்சியில் ஈடுபடும்போது, எதிர்பாராத விதமாக அவர் ஓட்டிய கார் பயங்கர விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பந்தய சாலையில் சீறிப்பாய்ந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோர தடுப்பில் கார் மோதி, சுழன்றி நின்ற காட்சிகள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.