கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி - சரோஜாதேவி

Update: 2025-01-08 00:36 GMT

பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் பிறந்த நாளையொட்டி அவரைப்பற்றிய ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி... என ரசிகர்களால் அழைக்கப்படும் சரோஜாதேவி பிறந்தது கர்நாடக மாநிலம் மைசூர். கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தமிழ் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கலக்கியவர்.

நடனத்துக்கே உரிய அபிநயங்களை முக பாவனை, உடல் அசைவுகளில் போஸ் கொடுப்பதில் திறமையானவர் என்பதாலேயே 'அபிநய சரஸ்வதி' என்ற பெயர் அவருக்கு ...

1954ல் கன்னடத்தில் அறிமுகமான ஓரிரண்டு ஆண்டிலேயே தமிழில் அறிமுகமானாலும் ரசிகர்களுக்கு அடையாளம் அவரை காண்பித்தது, எம்ஜிஆருடன் நடித்த நாடோடி மன்னன் படம்தான்.

எம்ஜிஆருடன் மட்டும் 26 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார், இதுதான் எம்ஜிஆருடன் நடித்த நாயகிகளில் அதிகபட்ச ஸ்கோர்.

எங்க வீட்டு பிள்ளை, படகோட்டி, அன்பே வா என கலர் படங்களாகட்டும்... கலங்கரை விளக்கம், நீதிக்குப் பின் பாசம், பணத்தோட்டம் என கருப்பு வெள்ளையாகட்டும் எம்ஜிஆருடன் நடித்த எல்லாமே ஹிட் படங்கள்.

சிவாஜியுடனும் 22 படங்களில் ஜோடியாக சரோஜாதேவி நடித்திருக்கிறார். ஆலயமணி, பாலும் பழமும், பாகப்பிரிவினை என பெரும்பாலான படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படும் காவியங்கள். 'புதிய பறவை' பட கிளைமேக்சில் "கோப்பால்... கோப்பால்..." என தழுதழுத்தபடி உருகும் வசனம் இன்றைய தலைமுறை வரை பிரபலம்.

அன்றைய முன்னணி நாயகர்களில் ஒருவரான காதல் மன்னன் ஜெமினி கணேசனுடனும் 17 படங்களில் நடித்திருக்கிறார். அதில் ‘கல்யாண பரிசு‘ காலத்தை வென்ற காவியம்.

50ஸ்களில் துவங்கிய சரோஜாதேவியின் திரைப்பயணம் 90ஸ், 2கேஸ் கடந்தும் தொடர்கிறது,. விஜய்யின் ‘ஒன்ஸ்மோர்‘ படத்தில் நீண்ட காலம் கழித்து சிவாஜியுடன் நடித்தார்.

சூர்யா, வடிவேலு உடன் ‘ஆதவன்‘ படத்தில் வரும் சரோஜாதேவியை இன்றைய தலைமுறையால் மறக்க முடியாது.

1960களிலேயே ‘கன்னட லேடி சூப்பர் ஸ்டார்‘ என புகழப்பட்டவர் சரோஜாதேவி, 160க்கும் அதிகமான படங்களில் நாயகியாக நடித்த பெருமை அவருக்கு உண்டு. தலைமுறைகளை கடந்து போற்றப்படும் சரோஜாதேவியின் 86வது பிறந்த தினம் இன்று...

Tags:    

மேலும் செய்திகள்