நடிகர் சல்மான்கான் வீட்டில் நடந்த திடீர் மாற்றம்

Update: 2025-01-08 03:01 GMT

மும்பையில் நடிகர் சல்மான்கான் வீட்டு பால்கனியில் குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தப்பட்டது. பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி பகுதியில் உள்ள அவருடைய வீட்டு முன்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதுதொடர்பாக லாரன்ஸ் பீஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பல் 5 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது. கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி சல்மான் கானை அச்சுறுத்தும் வகையில், அவருடைய சினிமா படப்பிடிப்பை காண வந்த ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில், சல்மான் கான் தனது வீட்டின் பால்கனியில் குண்டு துளைக்காத கண்ணாடிகளைப் பொருத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்