நடிகை ஹனி ரோஸ் புகார் - பிரபல தொழிலதிபர் மீது வழக்குப்பதிவு

Update: 2025-01-08 03:08 GMT

தமிழில் 'சிங்கம் புலி, பட்டாம்பூச்சி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஹனிரோஸ். தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் சைபர் தாக்குதலை சந்தித்து வரும் ஹனி ரோஸ், ஞாயிற்றுக்கிழமை எர்ணாகுளம் காவல் நிலையத்தில் 30 பேர் மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வாக்கு மிக்க, வசதி படைத்த ஒருவர், தன்னை தொடர்ந்து பொதுவெளியில் களங்கப்படுத்தி வருவதாக ஹனிரோஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அவர் அளித்த புகார் அடிப்படையில், தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போதுள்ள 30 வழக்குகள் தவிர, ஆபாசமாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது உடனடியாக ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர். போலி சுயவிவரங்கள் குறித்த தகவல்கள் கேட்டு மெட்டா நிறுவனத்தை அணுகியுள்ள போலீசார், மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்