பிற பெண்களை பலாத்காரம் செய்ய கணவன்களை ஊக்கப்படுத்தும் மனைவிகள் - வெளியான பகீர் தகவல்

Update: 2022-12-01 08:16 GMT

உக்ரைன் பெண்களை கற்பழிக்க தங்கள் கணவன்களை ரஷ்ய வீரர்களின் மனைவிகள் ஊக்கப்படுத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலென்ஸ்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 9 மாதங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் பெண்கள் மீதான ரஷ்ய வீரர்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஒலேனா ஜெலென்ஸ்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

போரில் ரஷ்ய வீரர்கள் கற்பழிப்பைக் கருவியாக பயன்படுத்துவதாக தெரிவித்த அவர், இது குறித்து ரஷ்ய படைவீரர்கள் மிகவும் வெளிப்படையாக தங்கள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவதாகவும், தாங்கள் கைப்பற்றிய தொலைபேசி உரையாடல்களில் அவை இடம்பெற்றுள்ளதாகவும் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், உக்ரைனிய பெண்களை பலாத்காரம் செய்ய ரஷ்ய வீரர்களின் மனைவிகளே கணவர்களை ஊக்கப்படுத்துவதாகவும் ஒலேனா ஜெலென்ஸ்கா குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்