திடீரென அதிகமாக பரவும் மர்ம காய்ச்சல்..! தென்காசியில் பரபரப்பு | Tenkasi
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே தன்னூத்து கிராமத்தில் பரவும் மர்ம காய்ச்சலால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், சாலையில் ஓடும் கழிவு நீரில் நாற்று நட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தன்னூத்து கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கழிவு நீர் அனைத்தும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தற்போது அந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்கு மருத்துவ முகாம் நடைபெற்று வரும் நிலையில், தெருக்களில் மழை நீர் தேங்காமல் இருப்பதை தடுக்க வலியுறுத்தி, சாலையில் தேங்கிய சாக்கடையில் அந்த பகுதி மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்