130 பேர் கொடூர கொலை... 49 வருட தொடர் ஆட்சியை ஆட்டிப்பார்த்த விவகாரத்தில் வெளியான தீர்ப்பு

Update: 2024-12-24 14:56 GMT

மொசாம்பிக் நாட்டில் ஆளுங்கட்சியின் தேர்தல் வெற்றியை உச்சநீதிமன்றம் உறுதி படுத்திய நிலையில், அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. தெற்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில், கடந்த அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் ஃப்ரீலிமோ கட்சி வெற்றி பெற்றது. 1975-ம் ஆண்டு முதல் ஃபிரீலிமோ கட்சி ஆட்சியில் இருந்து வரும், நிலையில், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை புகார்கள் எழுந்தன. இதையடுத்து, எதிர்க்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆங்காங்கே வெடித்த வன்முறை சம்பவங்களில் 130 பேர் கொல்லப்பட்டனர். ஆளுங்கட்சியின் வெற்றியை எதிர்த்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளும் ஃப்ரீலிமோ கட்சியின் வெற்றியை நேற்று உறுதி செய்தது. இதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதுவரை நடந்த வன்முறை வெறியாட்டங்களில் இதுவரை 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்