முதல் அணு ஆயுத சோதனையை மையமாக வைத்து பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ஓபன்ஹெய்மர் படத்தை உருவாக்கி வருகிறார்.
இதில் 1945ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் அணு ஆயுத சோதனையை படமாக்க திட்டமிடப்பட்ட நிலையில், பட்ஜெட் மற்றும் நடைமுறை சிக்கல்கள் பல வந்ததாகவும், ஆனால் படக்குழுவினரின் கூட்டு முயற்சியால் அணு ஆயுத சோதனையை கிராபிக்ஸ் இல்லாமல் தத்ரூபமாக படமாக்கி விட்டதாகவும் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார்.