உலகின் மிகப்பெரிய திரையில் விக்ரம் டிரெய்லர் - எகிறும் எதிர்பார்ப்புகள்
உலகின் மிகப்பெரிய திரையில் விக்ரம் டிரெய்லர் - எகிறும் எதிர்பார்ப்புகள்;
உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டடத்தில் விக்ரம் படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. விக்ரம் பாடம் நாளை திரைக்கு வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய திரை என வர்ணிக்கப்படும் புர்ஜ் கலிபா கட்டடத்தில் டிரெய்லர் வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நேற்றிரவு டிரெய்லர் திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்களுடன் இணைந்து கமல்ஹாசனும் டிரெய்லரை பார்த்து ரசித்தார். தொடர்ந்து ரசிகர்கள் விக்ரம் விக்ரம் என கோஷம் எழுப்ப, கமல்ஹாசன் அவர்களை நோக்கி கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.