Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-10-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-10-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-10-20 01:09 GMT
  • ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார், மாரடைப்பால் காலமானார்... மேல்மருவத்தூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நள்ளிரவிலும் வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி...
  • பங்காரு அடிகளாரின் உடல், சித்த முறைப்படி, மேல்மருவத்தூர் கோயிலின் கருவறை அருகே இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என தகவல்... இன்று காலை 9 மணிக்கு பிறகு, கோயில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில், பங்காரு அடிகளாரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது...
  • பங்காரு அடிகளாரின் ஆன்மிக புரட்சி, மிகவும் போற்றத்தக்கது என முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்... அவரது இறுதிச் சடங்கு, அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் அறிவிப்பு...
  • ஹமாஸ் தீவிரவாத குழுவின் ராணுவ திறன் மற்றும் நிர்வாக திறனை முற்றிலும் அழிக்கும் வரை ஓய மாட்டோம் என இஸ்ரேல் அமைச்சர் சூளுரை... ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு ஈரான் உதவி செய்வதாகவும் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி...
  • பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்... பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தார்
  • அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் தகவல்... ஓரிரு நாளில் வட கிழக்கு பருவமழை துவங்கும் எனவும் ஆரம்பத்தில் வலு குறைந்து இருக்கும் எனவும் பேட்டி...
  • தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் துவங்குகிறது... அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் 25ஆம் தேதியன்று ஆலோசனை நடைபெறுவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவிப்பு...
  • சைபர் குற்றங்கள் தொடர்பாக, நாடு முழுவதும் 76 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை.... கிரிப்டோ கரன்சியில் 100 கோடி மோசடி கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்....
Tags:    

மேலும் செய்திகள்