டேங்க் ஆபரேட்டர் பணிக்கு ரூ.5 லட்சம் கேட்ட ஊ.ம.தலைவர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்
- திருவண்ணாமலை அருகே, மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆபரேட்டர் பணிக்கு 5 லட்சம் கேட்டு, முதற்கட்டமாக 25 ஆயிரம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
- எடப்பிறையில் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜீவாமூர்த்தி என்பவர் பதவி வகித்து வருகிறார்.
- அந்த கிராமத்தில் மேல்நீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த கோவிந்தசாமி, கடந்த 4 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.
- அந்த பணியை அவரது மனைவி பராசக்திக்கு வழங்குவதற்கு, ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாமூர்த்தி 5 லட்சம் பேரம் பேசி பணம் தரும்படி நெருக்கடி அளித்துள்ளார்.
- இது குறித்து பராசக்தி லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
- அவர்கள் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாய் பணத்தை, போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்றக்கூடத்தில் அமர்ந்திருந்த ஜீவாமூர்த்தியிடம் கொடுத்துள்ளார்.
- அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக கைது செய்தனர்.
- அவரிடம் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைத்தினர்.