இணையத்தில் 'கேம் சேஞ்சர்' படம் வெளியானதால் அதிர்ச்சி

Update: 2025-01-10 16:58 GMT

திரையரங்குகளில் வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே, இணையத்தில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் படம் வெளியாகி சில மணி நேரத்திலேயே, இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வகையில் இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் கேம் சேஞ்சர் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்