2000 நோட்டுகளை மாற்ற அடையாள சான்றை சமர்ப்பிக்க தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்புக்கு எதிரான மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 29-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜராகி அஸ்வினி குமார் உபாத்யாய் முறையிட்டார்.
முறையீட்டை நிராகரித்த நீதிபதிகள், இது போன்ற மேல்முறையீடு மனுவை விடுமுறை கால அமர்வு விசாரணைக்கு எடுத்து கொள்வதில்லை என்றனர். தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் முறையிடுமாறு அறிவுறுத்தினர்