முகமது ஷமிக்கு என்ன தான் ஆச்சு.. ஒரு வழியாக உண்மையை உடைத்த பிசிசிஐ

Update: 2024-12-24 02:40 GMT

எஞ்சியுள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முகமது ஷமி பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஷமி காயத்தில் இருந்து மீண்டு, உள்ளூர் போட்டிகளில் பங்கேற்ற நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்பாரா என எதிர்பார்ப்பு எழுந்தது. எனினும், அவரது இடதுகால் முட்டியில் வீக்கம் குறையாததால், அவரால் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என பிசிசிஐ மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. முழு உடற்தகுதியை எட்டாததால், பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஷமி இடம்பெற மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்