அமெரிக்காவை அதிரவைத்த நிலநடுக்கம் - சுனாமி வருமா? அச்சத்தில் மக்கள் | Alaska | Earthquake |Tsunami|
இன்று ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 7.4ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 9.3 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அலாஸ்காவில் கடந்த 1964ம் ஆண்டு மார்ச் மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 9.2ஆகப் பதிவானது. வட அமெரிக்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். அதில், ஏற்பட்ட சுனாமி பேரலையால் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.